பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூஅழகான பெண்கள்

ஆயிரம் முறை பார்த்திருப்பாய்
என்னோடு வரும் என் தோழியை,
ஒரு முறை பார்த்திருக்கலாம் என்னை,
என் அழகில்லாத முகத்தை.

உன் விழிப் பார்வைகள் நோக்கும்
தேன் குழைந்த என் தோழியை,
ஒரு முறையாவது பார்த்திருப்பாயா
நான் தொலைத்த என் மனதை..

நீ பார்க்காமலே பேசாமலே
கொல்கிறாய், வதைக்கிறாய் என்னை.
நான் பார்த்து பார்த்தே
மெல்லுகிறேன் சிதைக்கிறேன் உன்னை.

அழகற்றதால் தான் என்-
முகம் மட்டும் தெரியவில்லையோ உனக்கு?
அகல விரித்துப் பார் என்னை.
என்னுள் அறுவடையாகும் காதலை.

என் இதயத்தின் ஆடை உனக்கென்றேன்
விழிகளின் ஈரம் உனக்கென்றேன்
அழகற்ற நானும் பெண்தான்
கவிதைக்காக மட்டுமல்ல இது...

கொய்தது பிச்சி @ 12:55 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்