பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூஎன் கருவுக்குள் நீ!!

ல்லூரி வளாகங்களில்
என்னையே சுற்றி வருகிறாய்
கோயில் சிலைகள் தோற்க.
கண்களினால் உன்னைக் கடைந்திடுவேன்
காதல் மட்டும் வாராது அப்போது.

தேக உரசலுக்கு உன் கண்கள்
தேடாது; மாறாக
சாகும் வரை காதலிப்பாய்
அன்றியும் உதறுவேன்
என் கைகுட்டையை.

(எனக்கு) துளி ரத்தம் சிதறினால்
உனக்கு வினாடிகளில் மறுஜென்மம்
கண்ணீர் உடைந்தால்
ஒட்ட முடியாத உன் இதயம்
பாதம் சறுக்கினால்,
போய்விடுகிறது

என்னைக் காப்பதாகச் சொன்ன
உன் கண்கள்.
ஓவியங்களை என் நெற்றியில் கண்டால்
கோவிலுக்குச் சென்று வேண்டுகிறாய்
இருந்தும் மெளனம் காக்கிறது
என்னுடைய கனமான இதயம்.

தும்மலோ, விக்கலோ, இருமலோ,
எனக்கு வருவதில்லை அவ்வளவு.
வந்தால் அலைகிறாய், நெளிகிறாய்
சற்றும் பிழைத்தும் போகிறாய்
என்மேல்தான் உனக்கு காதல் எவ்வளவு!!

ஆர்குட்டிலே நீ வீரியன்;
தமிழ் மன்றத்திலே நீ சூரியன்
இன்னபிற கவிதை சோலைகளுக்கு
நீயே எல்லாம்.
காரணம் நானென்றா சொல்கிறாய்?
நெருப்பு கொள்கிறது என் கண்கள்.

ஏதாவதொரு சமயத்தில்
உணவு இடைவேளைகளில்
தவறிவிழும் பருக்கைகளை
தேடிப் பிடிக்கிறாய்.
என் நா பட்ட பருக்கைகள்
உனக்கென்ன முத்துக்களா?
என் கொலுசுகள் ஏசுகின்றன உன்னை.

கல்லூரி மணியடிக்கும் போதெல்லாம்
உன் முகத்தில் கண்ணீர் செத்துப் போகிறது.
காலை கல்லூரி வந்து
என் முகம் பார்த்து பிழைக்கிறது
பரிதாபம் கொள்கிறேன் முதல்முறையாய்!

தயங்கி தயங்கி
என்னோடு வரும் தோழியை
நோண்டி
என்னோடு பேச நினைக்கிறாய்
பேச்சுக்கள் உடைந்து போகிறது
மூச்சும் கலைந்து போகிறது உனக்கு
என் சிரிப்பலைகளால் நீ சிலையாகிறாய்.

என்றாவது நான் பேச்சு கொடுத்தால்
இதயத்தை கையில் எடுத்துக் கொண்டு
சென்று விடுகிறாய்
பேசியபின் சொல்கிறாய்
'இதயத்தைக் காணவில்லை'
மெல்ல மெல்ல புரிகிறேன் உன் காதலை

இத்தனை காதல் வைத்தென்னை,
என் இதயத்தை
பிடுங்கியெடுக்கிறாய்
உன் நெஞ்சினில் என் இதயத்தைப் அமர்த்தி
கெஞ்சுகிறாய்,
என் நினைவுகளினாலேயே
உன் நினைவுகளை உருக்குகிறாய்
உன் காதலால் உன் இதயம்
என் கருவினில் வந்தமர்கிறது
என் காதலனே!!!

கொய்தது பிச்சி @ 2:44 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்