பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூகவிதைக்கு ஒரு கவிதை

நீ
யோகங்களின் பிறப்பிடம்.
உன்மதமான உறைவிடம்.
தியாக வளைவுகளில்
நர்த்தனமாடும் தெய்வீகம்.
வாழ்வுச் செறிவில்
ஓசையின்றி கூக்குரலிடும்
தாய்மையின் தாலாட்டு.

நீ
குறுத்துக்களில் மத்தியில்
திரவமில்லாமல் ஒளிந்திருக்கும்
சம்பத்து.
சுனைநீர் மேலிட
அங்கங்களில் கவிதை பாடும்
மகா கவி.
தாவரம் மேல் மிதக்கும்
ஆவி போன்ற வெண்மை
பனித்துளி.
பெளதிக வாழ்வில்
ஆன்மிகச் செறிவு
உட்கொள்ளும் ஆசிரியன்..

நீ
தாளங்களை ஏற்றிச் செல்லும்
ராகங்களின் உதயம்.
வேதப் பித்துக்களில்
யாதொரு பயமறியாது
கோள் சொல்லும் பிள்ளை.
விரல் நுனிவினில்
தேகம் வைத்து
நான் யாரெனச் சொன்னவன்.

நீ
கற்பு நெறி விளங்கும்
என் மனதில், ஆணின்றி
விதைத்திட்ட விதை.
என் விழிகளின் வழி
துளைத்து உன் ரசங்களை
ஊற்றிவிட்ட தென்றல்.
பிரபஞ்ச விருத்திக்கு என
பூமியுடன் கூடல் செய்த
தூயவன்.

நீ
என் காதல்
என் கவிதை.
என் தேகம்; தமிழ் தாகம்
என்னோடு யாதுமாகி.
நீயின்றி ஒரு அணுவும் உளதோ?

கொய்தது பிச்சி @ 2:53 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்