பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



சோக கீதம் என் அக்காவோடு

வெளூத்த பொழுதைக்
கழிக்க, குருவிக்
குஞ்சுகளுக்கும்
கனவுண்டு.
காதல் ஓலம் படைக்க
இலங்கைப் பெண்ணுக்கும்                   (என் தோழி; அக்கா!)
நனவுண்டு

அண்ணாந்து பார்த்த
அந்த ஒரு நிமிடம்
ஆர்ப்பரிக்கும்
அலைகடலுக்கும்
ஒப்பாகாத பார்வை;
காதலிக்கும் வண்டின்
ரீங்கார சப்தத்திற்கும்
மாட்டாத ஓலக்குரல்;
விழித்து விழித்து
விழிகளில் கோலமிடும்
காந்தக் கண்கள்
இவை யாவற்றிற்கும்
தகுந்த உனது அம்மா!

சொல்லவே துடிக்கும்
எனது கவிதையின்
எழுத்துகளுக்கு நிகரில்லை

தெவிட்டாத கூக்குரல்
தெளித்த இடமெங்கும்
எதிரொலிக்கும் கடலுக்கும்
எதிரான சக்தி கொண்டு
கேட்கிறது.
இயற்கையாய்
இறக்கை
இறந்துவிட்ட எனக்கு
இறவாத பறவை நீ!

சோகத்தில் கீதம் பாடும்
கவிதை படைக்கத் தெரியும்
இலங்கைப் பெண்ணுக்கு..
ஆனால்
எனக்கு அது தெரியாது.

ஆதலால்
பாடு குயிலே; சோக கீதம்
இந்தப் பெண்ணோடு!
ராகமும், தாளமும் மாற்றி,
சோகமும், காதலும் ஏற்றி,
குயிலுக்கே உரிய பண்ணோடு.
பாடு நீ!
அந்த சூரியன் அழியும் வரை
வானம் சிவக்கும் வரை
அலைகள் ஓய்வெடுக்கும் வரை
நானும் சாயும் வரை.
பாடு கீதம்
இலங்கைப் பெண்ணோடு!!

கொய்தது பிச்சி @ 3:19 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்