பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூசோகமானாலும் உன்னையே நினைக்கும் எனது கண்கள்

ன்றும்
என்னிதயம் மகிழும்
உன் (காதலன்) சொற்கள்
இன்று
மெல்ல மெல்ல
அவிழ்கிறதே
இதயத்தின் மேலாடை.

தனிமரமாய்
தவித்து தவித்து
ஏங்கிய என்னை அள்ளிப்
பருகினாய் உள்ளத்தில்.
அள்ளியபின்
எள்ளிச் சிரிக்கிறாய்

என்னிடம் தீர்த்தம் தீர்ந்துவிட்டதா?
அமிழ்தம் அமிழ்துவிட்டதா?
அள்ளியபோது நிறைகண்டாய்
இன்று குறையே காணுகிறாயே!

வெட்கம் இன்று எனக்கு.
நீர் கோர்த்த வெட்கம்!
உன்னிடம்தான்
வெட்கத்தின் இருவகை கண்டேன்.

சிரிக்கும்போது
வெட்கும் கூடவே இருப்பாய்
அழும்போது நீ சிரிக்கிறாய்
என் துளிகள் எனக்கு ரத்தம்
உனக்கு தூசி..

பேனாக்கள் இன்று
கடைகின்றன
என் விழித்துளிகளை வைத்து
ஒரு சோகக் கவி.

அவையும் அழுகின்றன மையோடு
எனக்குமட்டும் தெரியும் வகையில்
உனக்குத் தெரிந்து நான் ஒரு பூக்கும் மரமா?
இல்லை பட்ட கரமா?
அழுகிறேன்; அழுகிறேன்;
அழுவதற்கு இனி
நீரின்றி உலர்ந்து போகிறது.
உன்னையே இன்றும் நினைக்கும்
என் விழிகள்

கொய்தது பிச்சி @ 3:48 PM,

1 பின்னூட்டங்கள்:

At January 20, 2007 at 9:11 AM, Anonymous Anonymous சொன்னது...

சோகத்தைத் தாக்குகிறது கண்கள்
அருமை பிச்சி

 

Post a Comment

<< இல்லம்