பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



அரவாணிகளை ஒதுக்கினோமே!!

வீணைக் கம்பிகளின்
ஒலிவழியே சென்று
இசையாகி மலர்ந்த
ஓர் ராகத்தை
சீ! வேண்டாமென
சொல்லி ஒதுக்கினோம்

மண் வழியே ஊர்ந்து
விதையாகி, இலையாகி,
மரமாகி கனியாவதற்குள்
சீ! இந்த பழம் புளிக்கும்
என வீசி எறிந்தோம்

நத்தையை அழகென்று
எண்ணி கைகளில் சேர்த்து
ஊரும் வலியை மனதில்
வேறு விதமாய் நினைத்து
சீ! என்று வீசியெறிந்தோம்

பூவழகு, புனையழகு
என்று பூவைச் சுவைத்து
பல கவிதை சொல்லி
கனியழகு கனிச் சுவையழகு
என்று கொறித்து மகிழ்ந்தோம்
சீ! என்று ஒதுக்கி விட்டோம்
பூவுக்கும் கனிக்கும்
இடைப்பட்ட காயை!

வேல்விழியும் மான் தலையும்
பால் முகமும் பருத்தித் தோலும்
நால் குணமும் நல்லுயர்வும்
பெற்ற ஒருவரை
வணங்குகின்றோம்
சீ! என்று பார்க்காது போகிறோம்
மேற்சொன்ன
குணம் இருந்தும் இருக்காதவரை!

சில நேரங்களில்
அமீபாவாய் உருமாரும்
மனிதர்களின் ரூபமற்ற
அகத்தினை
சீ! என்று என்றாவது
சொல்கிறோமா?

கொய்தது பிச்சி @ 9:43 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்