பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூநிந்தித்த உன்னை....

ஈரம் மிகுந்த ஒரு கவிதையின்
வார்த்தைகளை சிதறிவிட்டாய்
அதன் உன்னத பொருள் தெரியாமல்
எழுத்துக்கள் எல்லாம் ஒன்று கூடி
பதம் பார்க்கும், என் காதலை
பங்கப்படுத்திய உன்னை.

விழிப்படலங்களின்
விந்தையான சக்தியில்
உன்னை நான் சந்தித்தேன்
உறுதியில்லாமல் உதறிவிட்டாய்
கதிர்களின் பாய்ச்சலை!
வெளிச்சம் தர மறுக்கும் (உனக்கு)
ஒளியின் பிள்ளைகள்.

ஏங்கி ஏங்கி கண்ணீரில்
வீங்கிப் போன இதயத்தை
உனக்காக காண்பித்தும்
கண்கள் கோண
மறுத்துப் போகிறாய்
இரத்த நாளங்கள்
பீய்ச்சி அடிக்கிறது
உன் கோரம் படிந்த முகத்தில்

இதயம் ஏற்ற கணமே
அறியாமல் போனதினால்
இன்று கனமாகப் போகிறது
என் நெஞ்சுக்குள்
உனக்காக" என்று நான் நினைத்த
இதயம்

வெறும் வாலிபத்தை
உபயோகித்த
உன்னை.
வார்த்தைகளால் சாகடிப்பேன்.

அறிந்து கொண்டேன்
உன் அழுகிய கண்களை
இன்றும் இறைவன்
இருப்பதால்தான்
அழுகாமல் இருக்கிறது
என் இதயம்.


கொய்தது பிச்சி @ 9:08 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்