பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூகுறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 6

உதிர்வினில் அழுதிடும்
மெல்லிலை மேலே
வெட்கம் பொருள் பாறாது
உமிழ்கிறாய்
உன் தாய் படைத்த வாயிலிருந்து

என்றாவது உதிர்பூக்களின்
விம்மிய மனத்தினைப் பார்த்ததுண்டா ?
உன் சந்தடி பட்டு
பொடியாய்ப் போகும் அவைகளின்
மனவேதனை ஒலியாவது கேட்டதுண்டா?

வாசம் வீசும் ஏலக்காயின்
உட்புற விதைகளை
உன் எச்சில் படுத்தி
எரிமலையின் உலைக்களமாய்
மாற்றிவிட்டாய்
உன் கொட்டம் அடக்கத்தான்
புனைப்பெண்ணாய் மாறினேனோ?

ஈறு பற்களின்
சந்து இடைவெளியில்
ஊறும் புழுக்களைப் போக்குவதில்லை
உன் காமவேட்கை படிந்த விரல்கள்
உள்துழாய்க் குடல்களின்
நாற்றத்தை மீறி
பரிகாசமாய் சிரிக்கிறது
உன் மந்தப்புத்தியுடைய மனது

கீறிய ரணங்களிலிருந்து
ஒரு துளி விழுந்திடினும்
புகைச்சல் ஆரம்பமாகும்
உன் கெட்டுப்போன இதயத்தின்
மேற்புற சவ்வுகளிலிருந்து..........

வீக்க மிகுதியில்
இடும் சாபங்களின் உஷ்ணம்
உன் உடலை எரித்துவிடும்.
உன் கனவை கலைத்துவிட்டு
நித்திரை கொள் புழுவே !
மிடிமை கொண்ட இதயத்திற்கு
என்று பிச்சி
அடிமை கொள்ளமாட்டாள்
பூச்சடங்கிய இதயத்திற்கு
எந்த பெண்ணும் மயங்கமாட்டாள்..

கொய்தது பிச்சி @ 8:14 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்