பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூஎன்னைப் பற்றி......

புறவிதழ் ரணம்படியா
பொற்றாமரைக் கூந்தல்!
கொடியிடைக் கோலம் கண்ட
பித்திகப் பூங்குறுநல்.

செவ்வானத்தடி குமுறலில்
புதிதாய் முளைத்திட்ட
நறுமுகையின் மறுபிரவேசம்!
எத்திசை வைத்தாலும்
கால்தடத்திலேயே ஓவியம் படைக்கும்
ரவிவர்மாவின் சொப்பன நாயகி!

மலடற்ற இதயத்தைக்
காணவைத்தே புன்னகையின்
நெஞ்சை நெக்கும் கொடிமுல்லை!
காயமின்றி கால்மடக்கி
நறுமணத்தைச் சூழ்ந்து
பூமீதேகிய பூக்களின் பிள்ளை.

முடியிழைத் தவறலில்
ஏங்கிய மல்லிகைக்கு
மூச்சுக் காற்றால்
வாசனை தந்த நீரூற்று.
இனியில்லை என்று
இலைகளைக் கொட்டிவிட்ட
தவிட்டுமரத்திற்கு
ஸ்பரிசத்தாலே உயிர்கொடுத்த
மென் காற்று.

அறுபதினாயிரம் ராகங்கள்
தோற்கும் அதி அதிசய ராகம்!
இசைத்திடவே பிரம்மன்
அசைக்கும் கண்ணனின்
புல்லாங்குழல்....

கதிருக்குள்ளும்
காதலுக்குள்ளும்
புதிருக்குள்ளும்
ஈதலுக்குள்ளும்
ஒளிந்திருக்கும்
ஓர் நிஜமான கற்பனை......

நான்....
நானேதான்......


கொய்தது பிச்சி @ 7:39 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்