பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூகுறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள்

குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள்
என்னை ஒருவன் காதலித்தான்... வேதனை செய்தான்... என் மனம் அறியாமல் தோற்றோடிவிட்டான்... அவனைப் பற்றி...............

வீதியில் நின்று சிரித்தோடிவிடுகிறது
இளமை பொங்கும்
இன்ப நிலா!

கண்டாவது களித்திடுவோமென
கங்கணம் கட்டியே
காத்துக் கிடக்கிறது
ஒரு கவியின் கரு.

அயர்ந்து போன வானத்தில்
கோபக் கூட்டமாய்
பால்வழியில் கூடுகின்றன
பூமியில் காதல் மறுப்பை
மறுத்து ஏங்கும்
கவிஞர்கள் கவிதைகள்

நிலவை நிந்தித்தே
நித்தம் கூடிடுவார்கள்
தீட்சணம் இல்லாமல்
தீண்டிடுவார்கள்
அனலின் அனுபவத்தை
எப்போதும் தாங்கியே போன
நிலவின் மையத்தில்
பனிகளை உருக்கி ஊற்றுவார்கள்
கவிஞனின் அநுமானத்தில்
ஏதாவது மிச்சமிருக்கலாம்
ஆம்! நிலவுக்கும் நிழழுண்டு
நிழற்சரிவு ஏற்படுத்த முடியுமா
சூரியனின் காதலியை ஏய்க்கும்
சூரிய பருக்கள்?
நெஞ்சு பிளந்தாலும்
நெருங்க முடியாத ஒரு
நட்சத்திரத்தின் அனல் மட்டும்
எப்போதும் வீசிக்கொண்டேதான் இருக்கும்...


கொய்தது பிச்சி @ 3:24 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்