பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூஎன் பிரிவு (இலையுதிர்வு)

உனக்கும் எனக்குமான
ஓர் பந்தம்;
நிரந்தரமற்றது.
யாவரின் பிறப்பைப் போல்
கொப்பூள் கொடியோடு
பிறக்கிறேன்.
என் பிறப்பிலிருந்து
இறப்புவரை
அது நீங்குவதில்லை
என்னை விட்டு.
என் நரம்புகள்
ரேகையாக எங்கும் படர
தேகமெல்லாம் ஓவியங்கள்;
செயற்கைக் காகிதங்களை விட
வலிமையான இழைகளான
பெட்டகங்களே என் குறிப்புகள்;
வர்ணத்திலும், வாழ்க்கையிலும்
இயற்கையாகவே
இருந்துவிட்டேன்.
நான் இறப்பதற்கு சற்று
முந்தய நாளில்
என் கொப்பூள் கொடி அறுப்பாய்!
நான் வீழ்ந்திடுவேன் கோபமாய்!
மெல்ல மெல்ல
மெளனராகமாய்
அங்குமிங்கும் அலைந்து
என் கீதங்கள் யாரின்
செவிக்கும் எட்டாதவாறு
மண்ணில் கலந்திடுவேன்..
இறந்துபோகும் யாருக்கும்
மண்ணே வீடு.
உன்னைவிட்டு விழுந்த போதும்
நீயே எனக்கு சுவர்க்கம்.
என் உதிர்வுகள்
ஒவ்வொருநாளும் நடக்கின்றன.
ஒரு சாதாரண மழையைப்போல....


கொய்தது பிச்சி @ 2:38 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்