பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



உயிர்கொண்ட சிலைகளும் காக்கும் அலைகள்....

தெள்ளத் தெளிவான அலைகடலில்
ஒவ்வொரு மீன்களையும்
நீயும் நானும் எண்ணுவோம்
எனக்குத் தெரிவதெல்லாம்
அலைகளின் அடுக்குகள்
உனக்கு மட்டும் ஊடுறுவும் தன்மை..

மெல்ல அசைந்தாடும் செதில்களைப்
பிடித்து இந்த அகிலமெங்கும்
வியாபித்திருக்கும் கடலை
உலா வருவோம்
எனக்குத் தெரிவதெல்லாம்
வெறும் நிலப்பாறைகள்
உனக்கு மட்டும் அதிசயக் கண்கள்.

இறுதியில் பாறைகளின் மேல்
கோபம் கொள்ளும்
அலைகளின் வழியே
நம் உருவங்களை அடைய இருப்போம்
எனக்குத் தெரிவதெல்லாம் வெறும் சிலைகள்
உனக்கு மட்டும் உயிர்ப்பிக்கும் அதிசயம்..

இருவரும் சிலையாகி அமர்கிறோம் கடற்கரையில்.....

தெறித்தோடுகிற அலைகளிடமிருந்து
காவல்கொள்ளத்தான்
நம்மை உயிருள்ள
சிலையாக வடித்துவிட்டார்களோ?
சுதந்திரமாய் கடலில்
திரிந்து கொண்டிருந்த நம்மை
கடற்கரைக் காவலாகவே
பிடித்துவிட்டார்களோ?

நீ என் வெட்கத்தில் திரும்பி நின்று
காதலோடு பார்ப்பதைக் கண்டு
ஓடி வருகிறதா அலைகள்?
கலைஞனும் மனதைப் பறிகொடுத்து
இதமாக இப்பாறை மேல் நம்மை
இதயமாக வளைத்தானோ சிலைகள்?

நீ தெறிக்கின்ற நீரை உன்
ஆழமான கண்களாலேயே நோண்டுகிறாய்!
துளிகள் பட்டுபட்டே நீ கரைந்துபோவாயோ
என்று அச்சப்பட்டு அலைகளிடம் வேண்டுகிறேன்.

மேன்மையும் பிணியும் மாறி வந்தாலும்
என் பார்வையும் காதலும் மாறாது..
அலைகளின் ஓட்டத்தில் நம்
பிணைப்புகள் என்று போறாது

ஆழியும் அந்தமும் இணைந்து
நம்மை காதலிக்கலாம்..
காதலனே! சொப்பனம் காணாதே!
நம்மை அலைகழித்த அலைநீரை
அந்தி மல்லிகை தந்து வரவேற்போம்
க்ருபை என்று கடலுக்கே!
வருகை என்று நல்வரவே!

கொய்தது பிச்சி @ 8:09 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்