பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூநிதம் நிதம் கன்னிமுத்தம் கதிரவா!

தளர்ந்து போய் நிற்கிறது
தீண்டலில்லாமல் தூங்கும்
இளந்தளிர் இலைகள்
குலுங்க மறுக்கிறது
குழந்தைகள் பல
பிரசவிக்கும் மரங்கள்

இறந்துபோன கிளைகளின்
உரித்த பட்டைகளும்
ஓணான் ஏறி ஒடிந்த
மரக்கிளைகளும்
உதிர்ந்துவிட துடிக்கிறது

ஒதங்களை ஒதுக்கிவிட்டு
அலைகள் உறங்குகின்றன.
இரைச்சலில் அடங்கிப் போய்
கிடக்கும் மீன்களும்
கண் திறக்க மறுக்கின்றன

அங்கங்கு உருளும்
சண்டமாருதங்கள்
தன் வேலையைக் காணாது
கிடக்கின்றன

ஊரில் உள்ள
ஒட்டு மொத்த நிலவும்
கனவில் தேய்கிறது
இயற்கைப் பேய்கள்
மெளனம் வீசிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு நாளும்
நீ இடும்
முதல் முத்தத்திற்கு
வெட்கப்பட்டு காத்திருக்கிறது
ஒட்டுமொத்த உயிர்களும்..

கொய்தது பிச்சி @ 9:01 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்